தமிழ்நாடு

மசாஜ் கேட்டு டார்ச்சர்? – பரபரப்பை ஏற்படுத்திய புகார்!

கன்யாகுமரி, செப் 08:_

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தால் 53 வயதான ரிக்சன் மனோ ஜோஸ் என்பவர் அன்னை வேளாங்கண்ணி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.இந்த நிலையில் தனது நிறுவனத்திற்கு பெண்கள் வேலைக்கு வேண்டுமென்று இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை வைத்து விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்து ஒரு கல்லூரி மாணவி அங்கு வேலை கேட்க சென்ற நிலையில் ரிக்சன் அந்தப் பெண்ணை வேலையில் சேர்த்துள்ளார். இரண்டு நாட்கள் கடந்த நிலையில் அவர் கண்ணுக்கு சொட்டு மருந்து ஊற்ற வேண்டும் எனக் கூறி அந்த மாணவியை தனியறைக்கு வர சொல்லி சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி அங்கு சென்ற நிலையில் அவர் செல்போன்களில் வைத்திருந்தால் மசாஜ் வீடியோக்களை காட்டி இது போல எனக்கு செய்தால் உனக்கு சம்பளம் அதிகமாக தருகிறேன் என்று கூறியதோடு அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசி உள்ளார்.

இதை அடுத்து அங்கிருந்து வேகமாக கிளம்பிய அந்த மாணவி அங்கு நடந்ததை வீட்டில் கூறியுள்ளார்.இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் மனோஜோசை கைது செய்துள்ளனர்.

இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அங்கு வேலை தேடி வரும் ஏழைப் பெண்களிடம் இதுபோல கூறி அவரது ஆசைக்கு இணங்க வைத்து அவர்களை ஷிப்ட் பேஸில் வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார் அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks