தமிழ்நாடு
தருமபுரியில் தனியார் சீட்டு பண்ட் நிறுவனங்கள் பல கோடி மோசடி? –
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சில தனியார் சீட்டு பண்ட் நிறுவனங்கள், பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
சீட்டு பண்ட் நிறுவனங்களின் இந்த மோசடி குறித்த புகாரின் பேரில், உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



