மற்ற செய்திகள்

ஆதரவின்றி ஏழ்மையில் இறந்த நான்கு முதியவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

 டிசம்பர் 17|கார்த்திகை 02

தருமபுரி 

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏழ்மையில் இறந்தோர், ஆதரவற்று இறந்தோர் ஆகியோரின் புனித உடல்களை மை தருமபுரி அமைப்பின் சார்பாக நல்லடக்கம் செய்யும் புனித பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆதரவின்றி இறந்த மூன்று முதியவர்களின் புனித உடல்களையும், பாலக்கோடு பகுதியில் ஆதரவின்றி சாலையோரத்தில் சுற்றித் திறந்து விபத்தில் இறந்த ஒரு முதியவரின் புனித உடலையும் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் தங்கள் உறவாக எண்ணி பச்சையம்மன் கோயில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். தருமபுரி நகர காவல் நிலைய காவலர் பாக்கியராஜ் பாலக்கோடு காவல் நிலைய காவலர் பெருமாள், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் கிருஷ்ணன், தன்னார்வலர் அருண் பிரசாத், கணேஷ் குமார், கார்த்திக் ஆகியோர் நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 180 ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தவர்களின் புனித உடல்களையும் நல்லடக்கம் செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks