அனைத்து செய்திகள்குற்றங்கள்
கேரள மாநிலத்தில் போதை பொருள் கண்காணிப்பு ஆய்வின் போது சிக்கிய 1 மீட்டர் வளர்ந்த கஞ்சா செடி சிக்கியது
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதக் சாகுபடியைத் தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

Neyyattinkara Excise Circle அதிகாரிகள் நடத்திய சோதனையில், Neyyattinkara பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு கஞ்சா செடிகள் கண்டறியப்பட்டன. நீதிமன்றத்தில் கஞ்சா செடியின் அளவை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், அதிகாரிகள் இன்ச் டேப் வைத்து அதன் உயரத்தை அளக்கின்றனர். பின்னர் வேருடன் பறித்து, பேக் செய்து, சீல் வைத்து வழக்கு பதிவு செய்கின்றனர்.
சட்டப்படி இது போதைப்பொருள் வழக்கு என்பதால், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றிப் பறிமுதல் செய்தனர்.



