ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையில் பக்தர்களிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை, பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதையில் பக்தர்களிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை, பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆடி மாத பௌர்ணமி கிரிவலத்தின் போது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி, கும்பலாகச் சென்ற 3 இளைஞர்கள் வரிசையாகச் செல்பவர்களைக் கண்காணித்துச் செல்போன்களைத் திருடி வந்தனர்.
கிரிவலம் சென்ற பக்தர் ஒருவரிடம் செல்போனைத் திருட முயன்றபோது, அவர் சந்தேகமடைந்து கூச்சலிட்டுள்ளார் உடனடியாகச் சுற்றியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அந்த இளைஞர்களைப் பிடித்து மடக்கிப் பிடித்தனர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் அந்த 3 நபர்களையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர்
காவல்துறையினர் அவரிடமிருந்த திருடப்பட்ட செல்போன்களைப் பறிமுதல் செய்து, 3 இளைஞர்களையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் தொடர்ந்து அவர்களிடம் வேறு எந்தெந்த இடங்களில் திருட்டில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிவலப் பாதையில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அளித்த உடனடி உதவியால் இக்கடத்தல் நபர்கள் பிடிபட்டுள்ளனர்.



