டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் தற்காலிக நீக்கம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) தனது கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு, பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டின் பழைய விதிமுறைகளுக்குப் பதிலாக இந்த புதிய கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
புதிய ஒழுங்கு நடவடிக்கைகள் (3 கட்ட நடைமுறை):
முதல் முறை விதிமீறல்:
1 மாதம் சஸ்பெண்ட் (தற்காலிக பணிநீக்கம்) செய்யப்படும்.சஸ்பெண்ட் காலத்தில் ஊதியம்/தொகுப்பூதியம் எதுவும் வழங்கப்படாது.நிர்ணயிக்கப்பட்ட அபராதம் வசூலிக்கப்படும்.1 மாதத்திற்குப் பின் “இனி தவறு செய்யமாட்டேன்” என்ற உறுதிமொழிப் பத்திரம் அளித்து, தலைமையக ஒப்புதலுடன் அதே மாவட்டத்தில் விற்பனை குறைவாக உள்ள வேறு கடைக்கு பணிமாற்றம் செய்யப்படுவர்.
இரண்டாம் முறை விதிமீறல்:
3 மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும்.சஸ்பெண்ட் காலத்திற்கு ஊதியம் கிடையாது + அபராதம் வசூலிக்கப்படும்.மீண்டும் பணியில் சேரும் போது, அதே மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்கிற்கு (Depot) மாற்றம் செய்யப்பட்டு, அங்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும்.
மூன்றாம் முறை விதிமீறல்:
உடனடி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, குற்றக் குறிப்பாணை (Charge Memo) வழங்கி துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்.விசாரணையில் குற்றம் நிரூபணமானால் நிரந்தர பணிநீக்கம் (Dismissal) செய்யப்படுவர்.
அபராத விவரங்கள்:
₹1 முதல் ₹9 வரை கூடுதல் வசூல் செய்தால்:
வசூலித்த ஒவ்வொரு கூடுதல் ரூபாய்க்கும் ₹1,000 வீதம் (அதிகபட்சம் ₹9,000 வரை) அபராதம் விதிக்கப்படும்.இதில் 60% தொகை விற்பனையாளரிடமிருந்தும், 40% தொகை மேற்பார்வையாளரிடமிருந்தும் பிடித்தம் செய்யப்படும்.
₹10 அல்லது அதற்கு மேல் கூடுதல் வசூல் செய்தால்:ஒரே தவணையாக ₹10,000 அபராதம் விதிக்கப்படும்.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
இந்த நடவடிக்கைகள் மற்றும் தண்டனை விவரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பணியாளரின் பணிப் பதிவேட்டில் (Master Record / Service Roll) அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும்.மாவட்ட மேலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் தவறு செய்யும் பணியாளர்களின் தகவல்களைத் தனிப் பதிவேட்டில் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



