கள்ளக்குறிச்சிதமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமு என்ற விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் ராமு (வயது50) விவசாயம் செய்து வந்தார். தனது நிலத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாய நிலத்தில் வந்து கொண்டிருந்த போது மின்சார கம்பி அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்ததால் சம்பவ இடத்திலேயே ராமு என்ற விவசாயி உயிழிழந்தார். விவசாயி உயிழிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks