மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில், கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்
மின்வாரியத்தில் 1.40 லட்சம் பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். ஒருவர் இரண்டு பேருக்கான வேலையைச் செய்து வருகிறார். எனவே உடனடியாக இது தொடர்பாக தனிக் கவனம் செலுத்தி ஒப்பந்த தொழிலாளர்களை விரைவாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.



