வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சோதனை சாவடியில் சோதனையின் போது தடை செய்யப்பட்ட 95 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது அதிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 95 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.இதைத்தொடர்ந்து அந்த வேன் ஓட்டுனரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது அவர் குடியாத்தம் லிங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ரகுபதி என்பதும் அந்த புகையிலை பொருட்களை ஆந்திர மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் வேன் ஓட்டுநர் ரகுபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்ததோடு அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.



