தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்டம்வள்ளியூரில் அரசு பஸ் கண்டக்டர் அடித்துக் கொலை: 5 பேர் கைது..வெளியான பகீர் வீடியோ

திருநெல்வேலிமாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (51). அரசு போக்குவரத்துக்கழக கண்டக்டரான இவர், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.


அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் அவரை கம்பால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த அவர், பைக்கில் இருந்து விழுந்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நள்ளிரவு வீடு திரும்பினார். காலையில் அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

உடலைக் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு சுரேஷ் குமார் மற்றும் காவல் துறையினர், தாக்குதல் நடத்திய நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் காயம் அடைந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks