தமிழ்நாடு

வெற்றிப் பயணத்தால் விபரீதம்? தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு!

தமிழகத்தில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதன் காரணமாக வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் சில தனியார் பேருந்துகளில் முன்னறிவிப்பின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வழித்தடம்

பட்டுக்கோட்டை → தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்: ₹31 → ₹35

பட்டுக்கோட்டை → தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்: ₹36 → ₹40

சில தனியார் பேருந்துகளில் ₹2 முதல் ₹5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீர் கட்டண உயர்வால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு தொடருமா? அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதே தற்போது பயணிகளின் கேள்வியாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks