தமிழ்நாடு

ஜனரேட்டரில் சிக்கிய முடி. ஒரே நொடியில் உரிந்து வந்த தலைத்தோல்..! விநாயகர் ஊர்வலத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கணபதி விசர்ஜன (விநாயகர் சிலை கரைப்பு) ஊர்வலத்தின் போது ஒரு நெஞ்சை பதற வைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது.

டிஜே இசை அமைப்பிற்காக இயக்கப்பட்டு வந்த ஜனரேட்டர் அருகே சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் நீண்ட தலைமுடி, எதிர்பாராதவிதமாக ஜனரேட்டரின் சுழலும் அச்சில் சிக்கிக் கொண்டது. ஜனரேட்டர் மிக வேகமாக சுழன்றதால், ஒரே இழுப்பில் அந்தப் பெண்ணின் தலைமுடி மண்டையோட்டுடன் சேர்ந்து பெயர்ந்து வந்தது. இதனால் அப்பெண் உடனே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

கங்கை கரை காவல் எல்லைக்கு உட்பட்ட பிரேம் நகரை சேர்ந்த கல்லு சோன்கர் என்பவரின் வீட்டிற்கு வெளியே கணபதி சிலை வைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மேள தாளங்கள் மற்றும் குலாலுடன் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக காந்தி நகரில் இருந்து கல்லு சோன்கரின் மருமகள் பச்சா சோன்கர் வந்திருந்தார். ஊர்வலம் நகரின் கங்கை பாலத்தை அடைந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த திறந்தநிலை ஜனரேட்டர் அருகே சென்று கொண்டிருந்த பச்சா சோன்கரின் நீண்ட தலைமுடி அதன் அச்சில் திடீரென மாட்டிக்கொண்டது.

சுற்றி இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து ஜனரேட்டரை நிறுத்துவதற்குள்ளாகவே, வேகமாகச் சுழன்ற அச்சு முடியை பலமாக இழுத்ததில் தலைத்தோல் முழுவதும் உறிந்து ஜனரேட்டரில் சுருண்டு கொண்டது. இதனால் அங்கு கூடியிருந்தவர்களின் மகிழ்ச்சியான சூழல் நொடியில் கூச்சலாகவும் சோகமாகவும் மாறியது.

உடனடியாக ஊர்வலத்தில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு கான்பூர் ஹெலட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks