தமிழ்நாடு
தருமபுரியில் தொடர் திருட்டு – கல்லூரிமாணவிகள் உட்பட 4 பேர் சிக்கினர்
தருமபுரி அக் 11,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பூட்டிய வீடுகளை மட்டும் குறிவைத்து அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சொகுசு காரில் வந்து இந்த திருட்டை செய்தது கல்லூரியில் படிக்கும் மாணவிகள் உட்பட 4 பேர் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து தங்க நகைகள், ரொக்க பணம் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.



