நத்தம் அருகே அதிரடி சோதனை: 498 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது!
திண்டுக்கல் அக் 11,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சம்பைப்பட்டி பகுதியில் போதப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு மினி வேன் ஆகிய மூன்று வாகனங்களையும் போலீசார் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்த வாகனங்களில் இருந்து 498 கிலோ போதப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்த வாகனங்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடிக்க முயற்சி செய்து உள்ளனர்.
இதில் இரண்டு பேர் தப்பிய நிலையில் மீதம் இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து தப்பிச் சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



