தமிழ்நாடு

மொரப்பூர் அருகே சென்னம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே பூட்டிய கடையில் திருட்டு: சிசிடிவி காட்சிகளுடன் அதிர்ச்சி சம்பவம்!

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே அமைந்துள்ள பூட்டிய கடையில் இன்று அதிகாலை (அக்டோபர் 15) மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு கைவரிசை:

சென்னம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கேசவன் என்பவருக்கு சொந்தமான கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று வியாபாரம் முடிந்ததும் கேசவன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் நடமாட்டம் குறைவாக இருந்ததை உன்னிப்பாக கவனித்த மர்ம நபர் ஒருவர், கேசவனின் கடையின் பூட்டை உடைத்தோ அல்லது திறந்தோ உள்ளே நுழைந்துள்ளான்.

கடைக்குள் நுழைந்த அந்த நபர், அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை தேடித் திருடும் காட்ச்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் திருட்டுச் சம்பவங்கள்:

கடந்த சில நாட்களாகவே சென்னம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்கள், மின் ஒயர்கள் (Cables) மற்றும் உதிரிபாகங்கள் தொடர்ச்சியாகத் திருடுபோவது வாடிக்கையாகிவிட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை முறையான ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை:

தொடரும் இதுபோன்ற தொடர் திருட்டுச் சம்பவங்களால் சிறு வியாபாரிகளும், விவசாயிகளும் கடும் பொருளாதார இழப்பை சந்திப்பதோடு, நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாத அச்ச சூழலில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, மொரப்பூர் காவல் துறையினர் உடனடியாக இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி, கடையில் திருடிய மர்ம நபரை விரைவில் கைது செய்ய வேண்டும். மேலும், அப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி பொதுமக்களின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks