தம்பிக்கோட்டையில் இன்று காலை நடந்த சோகமான நிகழ்வு பல பேருக்கு பாடத்தை கற்றுத் தரும்…
தம்பிக்கோட்டை, செப் 02

மின்மாற்றியை ஆஃப் செய்து வைத்திருந்த நிலையில், அவசர தேவைக்காக மின்மாற்றியில் ஏறியபோது, கட்டாகி இருந்த உயர் மின்னழுத்த (HT) ஒயர் மூலம் மின்மாற்றியில் மின்சாரம் கடந்து கொண்டிருந்தது தெரியாமல் ஏறியதால் தம்பிக்கோட்டை வடகாடு குடிநீர் வாரிய ஊழியர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்மாற்றி ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டது என்று உறுதி செய்யாமல் அதில் ஏறுவது மிகவும் ஆபத்தானது.
இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அவசர தேவைக்காகவும் யாரும் தாங்களாக மின்மாற்றியில் ஏற வேண்டாம்.
மின்சாரம் தொடர்பான பணிகளை தகுதியான மின்வாரிய பணியாளர்களின் பாதுகாப்பு நடைமுறைகளுடன் மட்டுமே மேற்கொள்ளுங்கள்.
அவசரத்தை விட உயிர் முக்கியம்!
ஒரு சிறிய கவனக்குறைவு… ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றிவிடுட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



