தமிழ்நாடு

மின்வாரியத்தில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் “

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மின்வாரியத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஓரிரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்”

மின்வாரியத்தில் தற்போது கணிசமான அளவில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், இதனால் மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் தேவையை கருத்தில் கொண்டு புதிய பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் நிர்மல் குமார், மின்துறையில் இந்த ஆண்டில் புதிதாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும், மின்வாரியத்தில் தேவையான பணியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், தற்போதைய பணியாளர் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் இடையே கணிசமான இடைவெளி இருப்பதாகவும் மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரியத்திற்கு 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கான ஒப்புதல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்வதுடன், பழைய மின்மாற்றிகள் மற்றும் பிற உபகரணங்களை மாற்றுதல், புதிய துணை மின் நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2031-ஆம் ஆண்டுக்குள் தேவையான 600 துணை மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் 6,000 புதிய மின்மாற்றிகள் நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks