தமிழ்நாடு

மாதனூர் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அரங்கல்துர்கம் ஊராட்சி காரப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய பாத்திரங்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குடிநீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை முறையாக மூடி வைக்கவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று புகை மருந்து தெளிக்கும் பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்பதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.

தொடர்ந்து காரப்பட்டு அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், புறநோயாளிகள், கர்ப்பகாலம், குடும்பம், அவசர சிகிச்சை, பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு மற்றும் பிரசவப் பதிவேடுகளை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்கவும், மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், காரப்பட்டு நியாய விலைக்கடையில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, தரம் மற்றும் மின்னணு விற்பனை முனையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
மலையாம்பட்டு பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்மாமலைக் குகையையும் ஆட்சியர் பார்வையிட்டு, குகைகள் மற்றும் அங்குள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பது, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் நா.கலு சிவலிங்கம், மாவட்ட தொற்று நோய் அலுவலர் அரவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks