தமிழ்நாடு

தடைசெய்யப்பட்ட கல்குவாரியில் கற்சுரங்கம்: மேலூர் அருகே ஹிட்டாச்சியை சிறைபிடித்து கிராம மக்கள் விடிய விடியப் போராட்டம்!

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட கச்சிராயன்பட்டி கிராமம் க.புதூரில், அதிகாரிகளால் தடைசெய்யப்பட்ட ‘ஆடுதுறை கல்குவாரி’ இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று (05.10.2026) இந்தக் குவாரியில் சட்டவிரோதமாகக் கற்களை வெட்டி எடுத்து கடத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதனையறிந்த க.புதூர் கிராம மக்கள் சம்பவ இடத்திற்குத் திரண்டு சென்று, சட்டவிரோதக் கடத்தலைத் தட்டிவட்டுக் கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டதும் கற்களை ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றன. இருப்பினும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு ‘ஹிட்டாச்சி’ (Hitachi) இயந்திரத்தைக் கிராம மக்கள் அதிரடியாகச் சிறைபிடித்தனர்.

தொடரும் போராட்டம்: சட்டவிரோதமாகக் கற்களைக் கடத்திய ஹிட்டாச்சி இயந்திரத்தைப் பறிமுதல் (Seize) செய்து, மேலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் வரை தங்களுடைய போராட்டம் ஓயாது என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம், இரவெல்லாம் நீடித்து இன்று (06.10.2026) காலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks