தமிழ்நாடு

நவீன அடிமைத்தனம்: மாணவர்களின் நேரத்தை மொபைல் திரைகள் ஆக்கிரமிக்கக் கூடாது

புதுடெல்லி, செப். 7:

மாணவர்கள் தங்களின் பொன்னான நேரத்தை மொபைல் போன்கள் மற்றும் திரைகளின் முன்னால் செலவிடுவது, அவர்களின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் வகையில் அமைந்து விடக்கூடும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மைதான விளையாட்டுகள், உடற்பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான கலை நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக பெற்றோரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாணவர்களின் நேரத்தை பயனுள்ள செயல்பாடுகளுக்கு திருப்புவதில் இருதரப்பினருக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி மட்டுமின்றி, அவர்களின் உடல், மன மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

– INAYAM NEWS.IN
தொடர்பு: 8825798959

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks