தமிழ்நாடு

தாராபுரத்தில் அரசு பொறியியல் கல்லூரி, பெண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வலியுறுத்தல்

தாராபுரம் |செப் 26,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பெண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மு. கார்த்திகா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பிரசார விளம்பரத்தில் தொகுதியின் கல்வி கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பெண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி வாய்ப்புகளை அதிகரித்து, மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் தாராபுரம் தொகுதியில் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks