சென்னைமாவட்ட செய்திகள்

கோர விபத்து… கல்லூரி மாணவி மூளை சிதறி பலி; சக மாணவி உட்பட 3 பேர் படுகாயம்!

 மாசி 22|வெள்ளிக்கிழமை 




மார்ச் 06,  சென்னை


அண்ணா பல்கலைக்கழகம் எதிரே நேற்று நடந்த கார் விபத்தில், கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜூனு (21) சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் காரில் சென்ற சக மாணவி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜூனு, பெருங்குடியில் உள்ள சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். அவர் தனது நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் இருந்து தரமணி நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்த போது அண்ணா பல்கலைக் கழகம் எதிரே திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.


 

காந்தி மண்டபம் சாலையில் அவுட் கேட் அருகே முன்னால் சென்ற கார் திடீரென வலப்புறம் திரும்பியதாக கூறப்படுகிறது. அதிவேகமாக வந்த மாணவர்கள் பயணித்த கார் பிரேக் பிடிக்க முடியாமல் மோதியதில் ஜூனு மூளை சிதறி உயிரிழந்தார். கார் ஓட்டிய பிரியா, ஜெகதீப் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.



முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் வெங்கடேசனும் காயமடைந்தார். காயமடைந்தவர்கள் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks