அனைத்து செய்திகள்குற்றங்கள்

ஹோட்டலில் ரூம் எடுத்து சிறுமியை சீரழித்த மருத்துவர்” – நான்காம் ஆண்டு மாணவிக்கு நடந்த சோகம். நீலகிரியில் பரபரப்பு!

பங்குனி 03|செவ்வாய்கிழமை 

 

மார்ச் 17|நீலகிரி 



நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் 45 வயதுடைய ஓம்பிரகாஷ். இவர் பணியாற்றும் மருத்துவமனையில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவ படிப்பு பயின்று வரும் நிலையில் இவரிடம் பயிற்சி எடுக்கும் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் குறைந்த மதிப்பெண்கள் பெற்று வந்திருக்கிறார். இதனை கவனித்த ஓம்பிரகாஷ் மனைவியிடம் இது குறித்து கேட்டு கண்டித்ததாக சொல்லப்படுகிறது.


அப்போது மாணவி தன்னால் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியவில்லை என்றும் தனக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஓம்பிரகாஷ் மாணவியிடம் அவரது செல்போன் எண்ணை பெற்று தினமும் மாணவியிடம் அவரது மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பேசி வந்திருக்கிறார். பின்னர் மாணவிக்கு உனக்கு கவுன்சிலிங் செய்ய உள்ளதாகவும், அதற்கு மேலும் மூன்று மருத்துவர்கள் உதகையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் கூறி, மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத நிலையில் தனி அறை எடுத்து மாணவியையும் அழைத்து சென்ற ஓம்பிரகாஷ் அந்த அறையில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி அதிர்ச்சியடைந்து அறையில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் தனது செல்போன் மூலம் அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து வீடு திரும்பியிருக்கிறார். தகவலறிந்த ஆத்திரமடைந்த பெற்றோர்கள் உதகை மத்திய காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.


இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் மருத்துவர் மனைவியிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. எனவே போலீசார் மருத்துவர் ஓம்பிரகாஷ் கைது போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக்கின்றனர். மருத்துவர் அங்கு பயிலும் மாணவியை ஹோட்டல் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks