சென்னைமாவட்ட செய்திகள்

நாம் தமிழர் கட்சி (NTK) இன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை, பிப்ரவரி-12

திமுக அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை கண்டித்து தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து ஊழியர் நலச் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் போராட்டம்‌ நடைபெற்றது.


இப்போராட்ட களத்தில் போராடும் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்க நாம் தமிழர் கட்சி (NTK) இன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார் அப்போது  சென்னை காவல் துறையினரால் இப்போராட்டம் நடத்த காவல்துறையால் அனுமதி வழங்கப்படவில்லை என்று போராட்டகாரர்களுடன் சீமான் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னும் பின்னும், போராட்டம் நடத்தும் உரிமையைப் பெற்றிருக்கும்  அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை கைது செய்ததற்காக திமுக அரசாங்கத்தை சீமான் கடுமையாகக் கண்டித்துள்ளார் சீமான்  கைது நகரத்தில் குறிப்பிடத்தக்க பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர் போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks