சென்னைமாவட்ட செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா’ புயல்.. நாளை கரையை கடக்கும்போது.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!

 நவம்பர் 30|கார்த்திகை 14

இலங்கை கடல் பகுதியில் உருவான டிட்வா புயல், வடதமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.



இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. புயல் தென்மேற்கு 
 மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும்போது வடதமிழகம் – புதுவை கடலோரப்பகுதிகளிலிருந்து நேற்று  நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும்,  அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது  25 கிலோ மீட்டர் தொலைவிலும் நகர்தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை காற்றின் வேகம் 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என வாநிலை ஆய்வு மையம் தெரிவித்த உள்ளது

சென்னை முதல் தஞ்சாவூர் இடைப்பட்ட பகுதிகளில் மிதமான மழை, புதுவை, கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.திருவெண்காடு 17cm, நெடுவாசல் -13cm, கடலூர் 7cm நேற்றைய நிலவரப்படி மழை பதிவானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks