குற்றங்கள்

டிஎன்ஏ டெஸ்டில் வெளுத்த சாயம்.. 17 வயது மாணவியின் குழந்தைக்கு அப்பா, ஈரோடு தவெக பிரமுகரா?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தவெக நிர்வாகி ஒருவர் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார்.. ஆரம்பத்தில் இவர் மீது எந்த டவுட்டும் யாருக்கும் வரவில்லை.. ஆனாலும் சம்பந்தப்பட்டவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து வந்தது.. இப்போது அந்த சந்தேகம் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் அம்பலமாகி விட்டது.. யாரிந்த தவெக நிர்வாகி? என்ன நடந்தது சத்தியமங்கலத்தில்?

சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் அந்த கல்லூரி மாணவி.. 17 வயதுதான் ஆகிறது.. இந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி, உல்லாசம் அனுபவித்து, அவரை கர்ப்பமாக்கியிருக்கிறார்கள்இது தொடர்பாக மாணவியின் பெற்றோர், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷ்னிலும் புகார் அளித்திருந்தனர்.

ஈரோடு யுவராஜ் சிக்கினார்இந்த புகாரின் பேரில், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அதே மலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. அதே கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற 26 வயது திருமணமான நபர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.. ஆனால், இவரை கைது செய்ய போதிய ஆதாரம் எதுவும் போலீசாரிடம் இல்லை.. எனவே, சந்தேகம் வலுவாக இருந்தும் உடனடியாக யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்யவும் முடியவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து, பிறந்த குழந்தை, மாணவி, யுவராஜ் என 3 பேருக்குமே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.. அதன்படியே 3 பேரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.டிஎன்ஏ டெஸ்ட்தற்போது அந்த டிஎன்ஏ ரிப்போர்ட் வந்துவிட்டது.. மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து, குழந்தைக்கு தந்தை ஆனது யுவராஜ் தான் என்பது டிஎன்ஏ பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஆதாரம் கிடைத்ததும் நம்ம மகளிர் போலீசார் சும்மா விடுவார்களா என்ன.. உடனடியாக யுவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைதும் செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

இந்த யுவராஜ் யார் என்று விசாரித்தபோதுதான் அடுத்த பரபரப்பு தொற்றி கொண்டது.. இவர் தவெக சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பொறுப்பில் இருப்பவராம்.. அதுமட்டுமல்ல, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ ஆகியோருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துக்கொண்டு, அதை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களிலும் பதிவிட்டு வலம் வருபவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது,

தவெக நிர்வாகி யுவராஜ்ஏற்கனவே தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பெண்களை குறிவைத்து அத்துமீறல் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன..

பெண்கள் பாதுகாப்புக்காக “சிங்கப்பெண் அதிரடி படை” என்ற சிறப்புப் படை இருந்தும், இந்த அளவுக்கு தொடர் குற்றங்கள் நடக்கும் வரை பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு எங்கே போனது என்ற கேள்வியும், கொந்தளிப்பும் பொதுமக்களிடம் தொடர்ந்து எழுந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், டிஎன்ஏ டெஸ்ட்டில் சிக்கி, தவெக நிர்வாகி போக்சோ வழக்கில் கைதாகியுள்ள இந்த சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks