இந்தியா

அரசு பள்ளி ஆசிரியை போதை பொருள் வழக்கில் – கைதுஆசிரியை உடனடியாக சஸ்பென்ட் செய்துள்ளது கேரள பள்ளி கல்வித்துறை

கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் வடகராவில் இருந்து வெளியாகியுள்ளது! பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு அரசு பள்ளி ஆசிரியையே போதைப்பொருள் விற்பனை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். பேராம்ப்ரா BRC-யின் கீழ் தற்காலிக சிறப்பு ஆசிரியையாக பணியாற்றி வந்த கே.சி. கீர்த்தனா தற்போது போலீசாரும் DANSAF அதிகாரிகளும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரை உடனடியாக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்வதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை தொடங்கியுள்ளது.

ஒரு தற்காலிக ஆசிரியையாக மட்டுமல்லாமல், போதைப்பொருள் கும்பலின் முக்கிய நிதி பரிவர்த்தனையாளராகவும் கீர்த்தனா செயல்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போதைப்பொருள் வாங்குபவர்கள் பணத்தை கீர்த்தனாவின் வங்கிக் கணக்கில் செலுத்துவார்கள். பணம் வந்தவுடன், அவரது கூட்டாளிகள் அந்த போதைப்பொருளை வாங்கியவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேராம்ப்ரா பைபாஸ் பகுதியில் கீர்த்தனா நடத்தி வந்த ‘பன் மஸ்கா’ கடையும் தற்போது போலீசாரின் சந்தேகப் பட்டியலில் உள்ளது. அந்தக் கடை போதைப்பொருள் விற்பனையை எளிதாக்குவதற்கான மறைமுக மையமாக இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கீர்த்தனா மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சிறந்த விளையாட்டு வீராங்கனையும் ஆவார். பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியையாகவும், ஜும்பா மற்றும் யோகா பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால், இந்த அடையாளங்களையே போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும், பல பள்ளிகளில் பணியாற்றிய கீர்த்தனாவின் தொடர்பில் பள்ளி மாணவர்கள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.கீர்த்தனாவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியவர்களின் பட்டியலையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வரும் நாட்களில் அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வரும் என்று போலீசார் நம்புகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks