
முலை வரிக்கு எதிராக அன்று தன் மார்பையே அறுத்து எறிந்து வீர மரணமடைந்தாள் நங்கேலி என்னும் வீர மங்கை! ஆனால் இன்று, வெறும் ஒரு சினிமா நடிகரைப் பார்ப்பதற்காக “என் நெஞ்சையே அறுத்துக் கொடுத்துருவேன்” என்று ஒரு பெண் கேமராவின் முன்னால் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துகிறார்!
உலகப் புகழ்பெற்ற தமிழ்ச் சமூகம் இன்று எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட அநீதியான ‘முலை வரி’ (மார்பக வரி)-க்கு எதிராக, தன் சுயமரியாதையையும் மானத்தையும் காப்பதற்காகத் தன் மார்பகங்களையே அறுத்து வாழை இலையில் வைத்துப் புரட்சி செய்து உயிர்நீத்தாள் நங்கேலி என்ற வீராங்கனை. அப்படிப்பட்ட வீரமும் மானமும் நிறைந்த மண்ணில், இன்று ஒரு வெற்று நடிகரைப் பார்ப்பதற்காகத் தமிழ் பெண் உறவுப் பெண் தன் மார்பை அறுத்து எறியத் துணியும் அளவிற்குப் பேசுகிறார் என்றால், தமிழ்ச் சமூகம் எவ்வளவு பெரிய வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
தலைமுறை தலைமுறையாகத் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள், உங்களை கொள்கை ரீதியாகவும், அறிவுப் பூர்வமாகவும் சிந்திக்க விடாமல், தங்களது சுயநல அரசியல் ஆதாயத்திற்காக இப்படி உணர்ச்சிவசப்படும் கூட்டமாக மட்டுமே வளர்த்து வைத்திருக்கிறார்கள். சினிமா கவர்ச்சியையும், கண்மூடித்தனமான தனிநபர் வழிபாட்டையும் மட்டுமே மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் இத்தகைய திரைக்கவர்ச்சி அரசியல் போக்கு தமிழினத்தின் சாபக்கேடு! மாற்றம் என்பது வெறும் முகங்களில் அல்ல, உங்கள் சிந்தனையில் வர வேண்டும் என்று இணைய வாசிகள் தங்களது எதிர்பை கருத்துகளாக பதிவு செய்தனர்.



