தமிழ்நாடு

சிங்கப்பெண்’ விழிப்புணர்வு முகாமில் மாணவி அளித்த பாலியல் புகார் – போக்சோ சட்டத்தில் இளைஞர் அதிரடி கைது..!

திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில், கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசிப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில், சிங்கப்பெண் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி. சித்ரா மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இந்த முகாமின் போது, அப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது தாயாருடன் சென்று சிங்கப்பெண் குழுவினரைத் தனியாக சந்தித்தார். அப்போது, கூவக்காபட்டி முத்துப்பழனியூரைச் சேர்ந்த மகாமுனியின் மகன் நாகமணி என்பவர், தனது செல்போன் எண்ணிற்கு அடிக்கடி தொடர்புகொண்டு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வருவதாகவும், இதனால் தனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks