ஆரணி சாலை குல்லா பாய் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 2 குடும்பத்தினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி – கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்துவாதாக பகிரங்க குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்த இரு வேறு குடும்பத்தினர் ஆரணி சாலையில் இருக்கக்கூடிய குல்லா பாய் என்னும் அசைவ உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, முகுந்தன், ரோஹித், மதுமிதா ஆகிய சிறுவர் சிறுமிகள் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் போன்ற உபாதைகளால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து லாரன்ஸ் என்பவரது குடும்பத்தில் லட்சுமி மற்றும் அவர்களது நான்கு வயது மகன் ஹர்திக் தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த இரு குடும்பங்களை சேர்ந்த சிறுவர் சிறுமிகள் உட்பட 10 பேருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



