
பீகார் மாநிலம் சிங்ஙாசனி கிராமத்தை சேர்ந்த சோத்திலால் ராம் வயது 29 என்பவர் கூலி வேலை தேடி ஈரோடு வந்து, பிறகு தன் சொந்த ஊர் கிளம்பி உள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்கும் போது எதிரே வந்த சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவரை பற்றி விசாரித்து இவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டது. மிகவும் வறுமை நிலையில் இறந்த இவரை சொந்த ஊர் எடுத்து செல்ல முடியவில்லை. மை தருமபுரி அமைப்பினர் தங்கள் சொந்த உறவாக எண்ணி ரோட்டரி எரிவாயு தகன மையத்தில் நல்லடக்கம் செய்து, அஸ்தியை இவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.
சேலம் ரயில்வே நிலைய காவலர் பிரபாகரன், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 229 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
மைதருமபுரி_அமரர்_சேவை நல்லடக்கம்_229 #மைதருமபுரி_8667229134



