ஆன்மிகம்தமிழ்நாடு

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் கோவில் விடுதிகளின் அறை வாடகை கட்டணம் , ஜூலை 13 முதல் உயர்த்தப்படுகிறது

பழனி கோவில் அறைகளின் விலை உயர்வு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் கோவில் விடுதிகளின் அறை வாடகை கட்டணம் , ஜூலை 13 முதல் உயர்த்தப்படுகிறது.


கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய கட்டண விவரங்களின்படி, இதுவரை இருந்த அறை வாடகை கட்டணங்கள் மாற்றப்பட்டு, ஏசி மற்றும் நான்-ஏசி அறைகளுக்கு புதிய வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணப்படி,
இராஜா அலங்காரம் ஏசி அறை ₹4,000,
தங்க இல்லம் ஏசி அறை ₹3,000,
கதிர் வேகம் ஏசி அறை ₹2,000,
வள்ளி தெய்வானை ஏசி அறை ₹3,000,
சின்னக்குமாரர் விடுதி மற்றும் சண்முக இல்லம் ஏசி அறைகள் தலா ₹1,500,
வழிவேகம் ஏசி அறைகள் ₹1,500 மற்றும் ₹1,000
என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


நான்-ஏசி அறைகளில்,
கார்த்திகேயன், வேலவன் மற்றும் குறிஞ்சி விடுதிகளில் ஒரு அறைக்கு ₹600,
மேலும் வேலவன் சிறப்பு நான்-ஏசி அறைக்கு ₹1,000 என கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏசி அறைகளுக்கான கட்டணத்திற்கு 5 சதவீத ஜிஎஸ்டி கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks