ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி கடந்த 06.07.2026 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை மனுவினை ஏற்று, அதன் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நீர்வளத்துறை கெலவரப்பள்ளி உதவி செயற்பொறியாளருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.



