மற்ற செய்திகள்

குடியரசு தின விழாவில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர்

 சனவரி 26|தை 11




தருமபுரி 


மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும் இரத்த தானமும் அவசர தேவையாக தமிழக முழுவதும் வழங்கி வருகின்றனர். 


புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தலைமுடி செய்ய கூந்தல் தானம் விழிப்புணர்வை தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தருமபுரி உங்கராணஹள்ளியை சேர்ந்த குணசீலன் சொக்கலிங்கம் 27 வயதுடைய இளைஞர் அவர்கள் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக குடியரசு தின விழாவை சிறப்பிக்க கூந்தல் தானம் மற்றும் இரத்ததானம்  வழங்கினார்.


அவரது குடும்பத்தினருக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறோம். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா கூந்தல் தானத்தை பெற்று கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks