மற்ற செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 3 அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு 17.03.2026 ஏலம் விடப்படவுள்ளது

 மாசி 30|சனிக்கிழமை

மார்ச் 14,தருமபுரி

தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 3 அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு 1. தனிவட்டாட்சியர் (ச.பா.தி), பென்னாகரம் (TN29G0652) பயன்பாட்டில் இருந்த வாகனம் ரூ.1,80,000/-ற்கும், 2. தனிவட்டாட்சியர் (ச.பா.தி), பாப்பிரெட்டிப்பட்டி (TN29G0452) பயன்பாட்டில் இருந்த வாகனம் ரூ.70,000/-ற்கும், 3. தனிவட்டாட்சியர் (ச.பா.தி), பாலக்கோடு (TN29G0455) பயன்பாட்டில் இருந்த வாகனம் ரூ.45,000/-ற்கும் ஏலம் விட ஆரம்ப தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கழிவு செய்யப்பட்ட வாகனத்தினை  17.03.2026 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக முல்லை கூட்டரங்கத்தில் (அறை எண்.208) ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்துகொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks