அனைத்து செய்திகள்குற்றங்கள்

“உங்க கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு”- இளைஞரிடம் காதல் மொழி பேசிய பெண், தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து திருமணம் செய்த கொடுமை..!

 

செங்கல்பட்டு, பிப்ரவரி-12


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே பட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் – அபுதா தம்பதியரின் மகன் விக்ரமன் (வயது.23).இவர் செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் செயல்பட்டு வரும் தங்கமயில் ஜீவல்லரியில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற விக்ரமன்வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் விக்ரமனை அவர்களது உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என தேடிப்பார்த்துள்ளார்கள். எங்கு தேடியும் தங்களது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தனது மகன் விக்ரமனை காணவில்லை என செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் விக்ரமனின் பெற்றோர் புகார் அளித்தனர்.



இந்த நிலையில் விக்ரமன், ஏற்கனவே திருமணமான தன்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக  செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விக்ரமன் வேலை செய்து வரும் நகைக்கடையில் கடந்த ஒரு மாதம் முன்பு விஜயலட்சுமி என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பெண் தன்னைவிட வயது குறைவான விக்ரமனுடன் நன்கு பழகியுள்ளார். இவர்களுக்குள் மலர்ந்த காதல் திருமணம் வரை வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 



இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்தப்பெண் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை விக்ரமனிடம் மறைத்து வாலிபரை மயக்கி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி தனக்கு இரண்டு குழந்தைகள் போதுமென கருதி விஜயலட்சுமி குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதையும் மறைத்துள்ளார்.



விஜயலட்சுமி குறித்து கிடைத்த அதிர்ச்சி தகவலை தெரிந்து கொண்ட விக்ரமனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததோடு என் மகனுக்கு ஒரு வாரிசுக்கு கூட வழியில்லாமல் அடுத்தவன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டானே என காவல்நிலையத்தில் அழுது புலம்பினார். பெற்றோர் அழுவதைப் பார்த்த விக்ரமன் சிறிதும் கவலைப்படாமல் தனது மனைவியை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தை விட்டு சென்றது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்கடிக்கச்செய்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks