மற்ற செய்திகள்

திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கணவன் மனைவி பலி – மகள் வீட்டுக்கு சென்று திரும்பி போய் நடந்த சோக சம்பவம்.

 

திருநெல்வேலி, பிப்ரவரி-12


திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள காரியாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேர்மநாதன்(57) இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்திகனி(50). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளை பரப்பாடி அருகே உள்ள  அம்பலவான புரத்தில் திருமணம் செய்து  கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் சேர்மநாதன் சாந்திகனி  தனது தங்களது மகள் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 

பரப்பாடி அருகே உள்ள வடிவம்மாள்புரம் நாலு மூக்கு சாலையில் வந்து கொண்டிருந்தபோது இந்த வழியாக வந்த கார் திடீரென பைக் மீது மோதியது மோதிய வேகத்தில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்பள்ளத்தில்  சேர்மநாதன் சாந்திகனி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மூலக்கரைப்பட்டி சேர்ந்த பத்திர எழுத்தர் அன்வரதம் பிள்ளை சேர்ந்த பட்டுராஜ் ஆகியோர் லேசான காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக விஜய நாராயணன் காவல் ஆய்வாளர் திருமதி பிரேமா ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பலியான சேர்மநாதன் சாந்திகனி ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் திருமதி பிரேமா ஸ்டாலின் அவர்கள் விசாரணை செய்து வருகிறார். கார் மோதி கணவன் மனைவி இறந்த சம்பவம் பரப்பாடி காரியாண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks