தமிழ்நாடு

திருப்பூரில் வங்கதேச தீவிரவாதிகள் ஊடுருவல், கோட்டை விட்டதா தமிழ்நாடு காவல்துறை; திமுக அரசின் உளவுத்துறை தோல்வி.?

 பிப்ரவரி 23|மாசி 11



திருப்பூர்,

திருப்பூரில் வங்கதேச தீவிரவாதிகள் 6 பேர் பதுங்கி இருந்து பாகிஸ்தான்  தரப்புடன் சேர்ந்து நாசவேலைக்கு திட்டமிட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் 6 பேரும் தமிழ் நாட்டிற்குள் மிக எளிதாக நுழைந்து, பனியன் தொழிற்சாலையில் சக தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக கலந்து இருக்கின்றார்கள்.

மேலும், நம்மை யார் கேட்டுவிட முடியும் என துணிச்சலாக பகிரங்கமாக முகநூலில் பாகிஸ்தான் ஆதரவு பதிவு எழுதியிருக்கின்றார்கள். இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் இவர்களை தமிழக காவல்துறை எட்டி கூட பார்க்கவில்லை;  கண்காணிக்கவுமில்லை. தமிழக உளவுத்துறை இவர்களை கண்காணிக்க தவறிவிட்டது. உண்மையை சொல்லப்போனால், தமிழக உளவுத்துறை செயலிழந்து விட்டது என்றே கூறலாம்.

டெல்லி போலீஸ் மோப்பம் பிடித்து திருப்பூர் வந்து தீவிரவாதிகளை கைது செய்கிறது. தமிழக போலீஸ்க்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.தமிழக காவல்துறைக்கு இது அவமானம்; தமிழக அரசுக்கு அதைவிட அவமானம். ஆனால் இதுபற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு வாயே திறக்காது.

உடனடியாக, தமிழகம் முழுக்க உள்ள வடமாநில தொழிலாளர்களை சோதனை செய்ய வேண்டும். அவர்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் இல்லையேல், தமிழகம் குட்டி வங்கதேசமாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி கொள்ளும்.

பகல்காமில் தீவிரவாதிகள் நுழையும் அளவிற்கு மத்திய அரசை குற்றம் சுமத்தியவர்கள்; நமது தமிழகத்தில் அதுவும் திருப்பூரில் வங்கதேச தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக ஊடுருவி உள்ளனர். இப்போது யாரை குற்றம் சொல்லப் போகிறார்கள் தமிழ்நாடு அரசு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks