தமிழக அரசியலில் மாற்றத்தை விதைக்கும் தமிழ் தேசியம்: ஒரு வரலாற்றுப் பார்வை – திருச்சி மாநாடு பிரமிக்க வைத்துள்ளது
பிப்ரவரி 23|மாசி 11
ச
திருச்சி,
தமிழக அரசியல் களத்தில் கடந்த 75 ஆண்டுகாலமாக கோலோச்சிய திராவிட அரசியலுக்கு மாற்றாக, “தமிழ் தேசியம்” எனும் அரசியல் நெருப்பை பற்றவைத்ததில் சீமான் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தனி ஒரு மனிதனாக நின்று, தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணின் தன்னுரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவரது போராட்டக் குணம் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தன் உயிரை மெழுகாக உருக்கி, தமிழ்நாட்டின் அரசியல் திசையை மாற்றியமைத்தவர்” என்று எதிர்கால வரலாறு இவரைப் போற்றும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.
குறிப்பாக, பாரம்பரிய திராவிட கட்சிகளின் பிடியில் இருந்த தமிழக அரசியலில், ஒரு புதிய புரட்சித் தீயை பற்றவைத்து, மாற்று அரசியலுக்கான பாதையை சீமான் அவர்கள் செப்பனிட்டுள்ளதாக தமிழர்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.




