அனைத்து செய்திகள்குற்றங்கள்

தனது உடற்பயிற்சி பயிற்சியாளர் (Gym Trainer) காதலனுடன் ஓயோ (OYO) விடுதிக்குச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்

 

ஏப்ரல் 08

திருமணத்திற்கு ஒரு நாள் முன்பாக, தனது உடற்பயிற்சி பயிற்சியாளர் (Gym Trainer) காதலனுடன் ஓயோ (OYO) விடுதிக்குச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடுதி அறையில் வைத்து பாடிபில்டரான காதலன், அப்பெண்ணுடன் அராஜகமான முறையில் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இதில் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகமாகியுள்ளது.

அதிகப்படியான ரத்தப்போக்கினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை, அந்த நபர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்தச் சம்பவம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவந்த நிலையில், அடுத்த நாள் நடக்கவிருந்த அவரது திருமணம் நின்றுபோனது. உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவான காதலனைப் பிடிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks