தருமபுரிமாவட்ட செய்திகள்

200 ஆவது புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

 

ஏப்ரல் 08, தருமபுரி 



தருமபுரி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல மனிதநேயமிக்க சேவைகளை செய்து வரும் மை தருமபுரி அமைப்பு, தினந்தோறும் பசித்தோருக்கான அன்னதானம், இரத்ததானம், ஆதரவு அற்றும், ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் சேவை, மணீஷ் மருத்துவ சேவை திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஊட்டச்சத்து குறைபாடுள் உள்ளோருக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகின்றனர். 



நல்லடக்கம் செய்யும் புனித சேவையை கடந்த 2022 முதல் தருமபுரி மாவட்டத்தில் செய்து வருகின்றனர். ஏழ்மையில் இறந்தோர், ஆதரவற்று இறந்தோர், வட மாநிலத்தோர் என இதுவரை 200 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.



இறந்த ஆத்மாக்களுக்கு ஆத்மாத்ம சாந்தி பூஜையை காசி, ராமேஸ்வரம், காவிரி ஆறு, திருவனந்தபுரம் பரசுராமர் கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் திதி வழங்கி செய்துள்ளனர். மை தருமபுரி அமரர் சேவைக்கு பல நல்ல உள்ளங்களும் தங்கள் பங்களிப்பை, ஆதரவையும் வழங்கி வருகின்றனர். 200 ஆவது புனித உடலை மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks