தமிழ்நாடுதருமபுரி

ஆதரவற்று இறந்த 70வயது தாத்தாவின் புனித உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் கிராமத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி வயது 70 இவர் உடல்நிலை சரியில்லாமல் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிப்ரவர் 2023 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மார்ச் 2023 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவரை பற்றி ஜெகதாப் கிராமத்தில் விசாரித்த போது யாருக்கும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த தாத்தாவின் புனித உடலை மை தருமபுரி அமைப்பினர் தங்கள் உறவாக எண்ணி நகராட்சி பச்சையம்மன் கோயில் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

காவேரிப்பட்டினம் காவல் நிலைய காவலர் பிரபாகரன், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அலெக்ஸாண்டர், பாப்பாரப்பட்டி நந்தகுமார் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 230 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks