தமிழ்நாடு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயிலில் திடீர் சோதனை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயிலில் திடீர் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து அரக்கோணம் வழியாக திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரயிலில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
அப்போது அந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை போலீசார் சோதனை செய்தபோது சுமார் ஐந்து கிலோ எடையுள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கிடைத்துள்ளது.இதைத்தொடர்ந்து அந்த இரண்டு பைகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் யார் என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



