தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டம் தேக்கம்பட்டி அருகே 3 குழந்தைகளுடன் தாய் பிணமாக மீட்பு! கொலையா? தற்கொலையா?

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தோக்கம்பட்டி (தடங்கம் ஊராட்சி) பகுதியில் தோக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35), அவரது மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6) மற்றும் 3 வயது மகன் குமரன் ஆகிய 4 பேரும் ஜூலை 19 அன்று வீட்டிலிருந்து மாயமாகினர் ​தொடர்ந்து தேடிவந்த நிலையில், ஜூலை 21 இரவு அவர்களின் உடல்கள் வீட்டின் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டன.

கொலையா? தற்கொலையா?

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி தம்பதியிடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக அம்சா மனமுடைந்து 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஆத்திரத்திலும் மன உளைச்சலிலும் 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு, அம்சாவும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது.

உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks