பள்ளியில் முதலிடம் பிடித்தும் அரசுப் பள்ளியில் சீட் கிடைக்கவில்லை: தர்ஷினியின் உயர்கல்வி கனவு கேள்விக்குறி!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றும், அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பில் (11 ஆம் வகுப்பு) சேர இடம் கிடைக்காததால், மாணவி ஒருவரின் உயர்கல்வித் கனவு கேள்விக்குறியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்றுத் தனது பள்ளியில் முதலிடம்(School First) பிடித்துள்ளார் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த போதிலும், திருவாரூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் (Government Model School) அடுத்தகட்ட உயர்கல்வி பயில்வதற்கு இவருக்கு இடம் (சீட்) கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தும் தகுதியான ஒரு மாணவிக்கு அரசுப் பள்ளியிலேயே இடம் மறுக்கப்பட்டுள்ளதால், அவரது உயர்கல்வி கனவு மற்றும் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தர்ஷினிக்கு நியாயம் கிடைக்குமா? என்று சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேள்விகள் எழுந்து வருகின்றன.> கல்வித்துறை அதிகாரிகள் இதில் உடனடியாகத் தலையிட்டு, சாதனை படைத்த மாணவி தர்ஷினிக்கு மேல்நிலை வகுப்பில் சேர உரிய இடம் வழங்கி, அவரது கல்விக்கனவு நனவாக உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



