தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் அருகே தனியார் பேருந்து ஏறி கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலி

திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி சேர்ந்த கபூர் – ஜீனத் தம்பதியினர், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி பலியாகினர். இந்த சம்பவம் மக்களின் நெஞ்சை உலுக்கி உள்ளது

விபத்து ஏற்பட்டதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்குப் பிறகு தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks