மற்ற செய்திகள்

தி.மு.க இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் திரு.பழனியப்பன் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது

 நவம்பர் 25|கார்த்திகை 09

பாப்பிரெட்டிபட்டி 

மோளையானூர் இல்ல முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தருமபுரி மேற்கு மாவட்ட கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள சிறப்பு நலத்திட்ட விழா மற்றும் கழக இளைஞரணி மண்டல மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

                                              

இக்கூட்டம், மாண்புமிகு கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, மற்றும் வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள், மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. M.R.K. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. பி. பழனியப்பன், M.Sc., Ph.D, அவர்கள் தலைமை வகித்தார். தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு. ஆர். சிவகுரு வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் திரு. மகேஷ்குமார் திரு. நாசர், ஹரிபிரசாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நவம்பர் 27ம் தேதி மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எழிய மக்கள், பள்ளி மாணவ-மாணவியருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. மேலும், நடைபெறவுள்ள கழக இளைஞரணி மண்டல மாநாட்டில் உறுதியாக பங்கேற்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணியின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர், பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் திரு. முத்துக்குமார் அவர்கள், தருமபுரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. சி. சண்முகம் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks