மற்ற செய்திகள்

மிகச் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் வழங்கி கெளவரித்தார்

 நவம்பர் 12|ஐப்பசி 26

கடலூர்  

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று 12.11.2025 தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,  காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. K. கோடீஸ்வரன், திரு. V. ரகுபதி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள்  காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த அக்டோபர் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த  காவல் ஆய்வாளர்கள் திரு. கதிரவன் திருசுரேஷ்நடராஜனருமதி. பாரதி திரு. செந்தில்குமார் திரு. உதயகுமார் திரு. சிவபிரகாசம் திரு. பாஸ்கர் திரு. நந்தகுமார் திரு. ரவிச்சந்திரன் திரு. சந்திரன் திருமதி. கவிதா, உதவி ஆய்வாளர்கள் திரு. ஆனந்தகுமார் திரு. கவியரசன் திரு. பிரசன்னா திரு. பாலமுருகன் திரு. சுரேஷ்முருகன் திரு. செந்தில்குமார் திரு. சக்திவேல் திரு. திவாஷ் திரு. செல்வகுமார், திரு. பரந்தாமன் திரு. நடராஜன் திரு. மணிகண்டன் திரு. செல்வபாண்டியன் திரு. பிரேம்குமார் திரு. தவச்செல்வம் திரு. சிவராமன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் காவலர்கள் என 106 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks