தருமபுரிமாவட்ட செய்திகள்

ஆதரவற்று இறந்த 196 ஆவது புனித உடல்களை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

 மாசி 30| சனிக்கிழமை



மார்ச் 14|தருமபுரி 


தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்துள்ளது, இறந்தவரின் புனித உடலை மீட்டு விசாரித்ததில் இவரை பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.



ஓசூர் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் புனித உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஓசூர் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் சிவகுமார்,



அதியமான் கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராமர் முன்னிலையில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ்குமார் ராஜா, அமைப்பாளர் சையத் ஜாபர், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லட்க்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 196 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks