மற்ற செய்திகள்

பாரத மாதா மக்கள் சிந்தனை குழு மற்றும் கம்பன் கழகத்தின் கெளவர தலைவர் திரு.B.N.குருராவ் காலமானார் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது

 அக்டோபர் 21 | ஐப்பசி 04

B.N குருராவ்

தருமபுரி

சேவையின் அடையாளமாக திகழ்ந்தவர் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு மற்றும் கம்பன் கழகத்தின் கெளரவத்  தலைவர் அனைவரின் மதிப்பிற்குரிய ஐயா  திரு.B.N.குருராவ் அவர்கள் 21.10.2025 இன்று காலை 5:30 மணியளவில் இயற்கை எய்தினார் அவரது விருப்பப்படி கண்களை தானம் அளிக்க குடும்பத்தார் முடிவு செய்தனர் அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் மருத்துவர் சந்தானம் ஐயா மூலமாக தருமபுரி இந்தியன் பில்லர்ஸ் அமைப்பிற்கு கண்கள் தானம் அளிக்க தகவல் தெரிவிக்கப்பட்டது.

B.N.குருராவ் ஐயாவிற்கு  பாலச்சந்திரன் துவாரகநாத் பிரபு சீனிவாசன் ஆகிய மூன்று மகன்களும் வேணி ரகோத்தமன் என்ற மகளும் உள்ளனர் இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் திரு.வினோத் நரசிம்மன் பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவர் ஆகான்ஷா மருத்துவமனை மேலாளர் அசோக் ஆகியோர் நேரில் சென்று கண்களை தானமாக பெற்றனர். உதவும் உறவுகள் ராமன் கம்பன் கழகம் திரு.பரமசிவம் ஆகியோர் முன்னிலையில் குடும்பத்தாருக்கு கண் தானத்திற்கான நன்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கண்களை தானமாக அளித்த குடும்பத்தினருக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு உறுப்பினர்கள் கம்பன் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

கண்களை தானம் அளிக்க விரும்புபவர்கள் இந்தியன் பில்லர்ஸ் அமைப்பினை 9384444108, 9340000108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks